குறைவற்ற நிறைவே மனம் வேண்ட...
குறை ஏற்க உடல் ஊடாக...
மனம் உடல் நலமே நலம்...
கன்னத்தில் குழி புன்னகை மலர...
சிரித்த முகம் ரசிக்கத் தூண்ட...
உளம் மெல்ல இமயம் ஏற....
பண்டிகையாம் தீபத் திருநாளில்...
சுற்றம் சேர மகிழ
வாழ்த்தும்...
அன்புள்ளம் இராமன் நானே...
அகந்தை இல்லை அன்பால் மொழிந்தேன்...
ஒளி பகரும் தீப நாளில்...
உகந்த பலகாரமுண்டு...
தித்திப்பாய் ருசி ரசித்து...
திவ்யமாய் மனமுவந்து ...
இல்லார்க்கும் தந்து மகிழ...
மொழியாய் இனித்திடவும்...
மொழிபோல் தளைத்திடவும்...
மொழிகிறேன் அடக்கமாக...
மொழி வழி உங்கள் நண்பன்....

